அதிமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
சென்னை :
சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மாநில தேர்தல்ஆணையம், காவல்துறை, திமுக ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நேற்று நடந்த பெரும் வன்முறையைத் தொடர்ந்து அதிமுகைவச் சேர்ந்த40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்தனர்.உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வன்முறை நடந்து கொண்டிருப்பதாகவும், எனவே அதிமுக சார்பில் தாக்கல்செய்யப்படவுள்ள மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினர்.நேற்று உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்ற போதிலும் கூட, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ஷாஅனுமதி கொடுத்தார். இதையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, முகோபாத்யாஆகியோர் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மாலை 4 மணிக்குத்தான் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்குகளைப் பெற்றது. அதிகதொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
எனவே மாநகராட்சித் தேர்தலில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ளாமல் திமுகவினர் பெரும் அராஜகத்தில்ஈடுபட்டனர். போலீஸ் துணையுடன் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து அராஜம் செய்தனர். 155 வார்டுகளிலும்இதே நிலைதான்.
ஓட்டுப் பெட்டிகளையும், ஓட்டுச் சீட்டுக்களையும் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தனர்.இதுகுறித்து கூடுதல் ஆணையரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்களிக்க வந்த அதிமுக வேட்பாளர்கள், அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூடபெருமளவில் தாக்கப்பட்டுள்ளனர். எங்களது கட்சி வேட்பாளர்கள், பூத் ஏஜென்டுகளில் பலர் வக்கீல்கள். 27வேட்பாளர்கள் வக்கீல்கள் ஆவர். இவர்களே, திமுக ரவுடிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உயிர் தப்பிஓடியுள்ளனர்.
பல வாக்குச் சாவடிகளில் 12 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விட்டதாக கூறி வாக்குச் சாவடிகளை இழுத்து மூடிவிட்டனர்.
155 வார்டுகளிலும் ரவுடிகள் மூலம் பயங்கர தாக்குதல்கள நடத்தப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். வழக்குமுடியும் வரை வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், திமுகவினரிடமிருந்து கைப்பற்றியதாக கூறி வாக்குச் சீட்டுக்களையும், முத்திரையையும் அதிமுகவினர்நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர். அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஜோதியும், தேர்தல் ஆணையம் சார்பில் அரசின்தலைமை வழக்கறிஞர் ஆர்.விடுதலையும் ஆஜராகினர்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தனும் ஆஜராகி இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளக் கோரி மனு கொடுத்தார். அதை நீதிபதிகள் ஏற்றனர்.
அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக வருகிற 16ம்தேதிக்குள் விளக்கமளிக்குமாறு கூறி தேர்தல் ஆணையம், சென்னை காவல்துறை, திமுக ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications