கைதான அதிமுக எம்.எல்.ஏக்கள் விடுதலை
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகஎம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடந்த தேர்தலின்போது பெரும் வன்முறை நடந்தது. கிட்டத்தட்ட அனைத்துவார்டுகளிலும் வாக்குச் சீட்டுக்களை கிழிப்பது, சூறையாடவது, கள்ள ஓட்டுப் போடுவது சரமாரியாக நடந்தது.பல இடங்களில் வன்முறை, அடிதடி, வெட்டுக் குத்தும் நடந்தது. திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக்கூறி அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜகவின ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபுவை போலீஸார் கட்டி இழுத்து அழைத்துச்சென்று கைது செய்தனர். இதேபோல கலைராஜன் எம்.எல்.ஏ. மீதும் தடியடி நடத்தி போலீஸார் கைது செய்தனர்.
பூங்கா நகர் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவாசனையும் போலீஸார் கைது செய்தனர். அத்தோடு ஏராளமானஅதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று மாலை அதிமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் வன்முறை தொடர்பாக வழக்குதொடரப்பட்டுள்ளவர்களை மட்டும் போலீஸார் விடுவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications