அணு ஆயுதம்: ஆசிய நாடுகளுக்கு யு.எஸ். எச்சரிக்கைஅணு ஆயுதம்: ஆசிய நாடுகளுக்கு யு.எஸ். எச்சரிக்கை
வாஷிங்டன்:
வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை பின்பற்றி ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் இறங்கினால்விபரீத விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்துறைக்கான வெளியுறவு துணைஅமைச்சர் கிறிஸ்டோபர் ஹில் பேசுகையில், வட கொரியாவின் அணு ஆயுத சோதனையைத் தொடர்ந்து மேலும்சில ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் குதிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக அமெரிக்கா கருதுகிறது.ஆனால் இது மிகப் பெரிய ஆபத்தாக முடியும். அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது ஆசிய கண்டத்திற்கும் இதுபெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.
தங்களது சுய பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என அந்த நாடுகள்நினைக்கக் கூடாது. வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை எப்படி உலகம், அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதேபோல ஆசிய நாடுகளின் அணு ஆயுதப் போட்டியையும் உலக நாடுகள்அனுமதிக்காது.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், மோசமான பாதைக்கு ஆசியகண்டத்தைத் திருப்பும் செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் அந்த நாடு மீது பொருளாதார தடைகளைகொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
இந்த பொருளாதார தடையை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச சமுதாயத்தை மிரட்டும்வகையிலான தனது போக்கை வட கொரியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹில்.
ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஹில் பேசியிருந்தாலும் கூட ஈரானை மனதில் கொண்டேஅவர் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications