மறு தேர்தல் நடத்த வேண்டும்: விஜயகாந்த்
சென்னை:
செனனை மாநகராட்சிக்கு மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக தலைவரும், நடிகருமானவிஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நேற்று நடந்த முறைகேடுகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணை சந்தித்து விஜயகாந்த் புகார் கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்தஉள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறின. இப்போது திமுகவினர் அராஜகம்செய்கிறார்கள்.வழக்கமாக பிற்பகலுக்கு மேல்தான் கள்ள ஓட்டுப் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்வாக்குப் பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே, அதாவது 7.30 மணிக்கே கள்ள ஓட்டை தொடங்கிவிட்டனர்.
தேர்தல் வன்முறை தொடர்பாக ஆணையர் லத்திகா சரணிடம் புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரது பதிலில்எனக்கு திருப்தி இல்லை.
நான் தெய்வத்தை நம்புகிறவன். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். எனவேஅராஜகத்தை தெய்வம் நின்று கொல்லும்.
எனது ஓட்டு உள்ள சாலிகிராமத்தில் ஒட்டுப் போட கிளம்பினேன். ஆனால் அங்கு கள்ள ஓட்டுக் கும்பல் படுமும்முரமாக கள்ள ஓட்டுப் போடுவதாக கேள்விப்பட்டு மனம் நொந்து போய் விட்டேன். ஓட்டுப் போடவேஎனக்கு மனம் வரவில்லை. இதனால் வாக்களிக்காமல் திரும்பி விட்டேன்.
சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். கள்ள ஓட்டுக்களும், வன்முறையும் இந்த தேர்தலைகேலிக்கூத்தாக்கியுள்ளன. ராணுவ பாதுகாப்புடன், மத்திய தேர்தல் ஆணையத்தின நேரடி மேற்பார்வையில் இந்ததேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications