ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் விஜயகாந்த்.அப்போது அவர் பேசுகையில், இந்தத் தேர்தலில இந்த அளவுக்கு வன்முறை எதற்காக நடந்தது தெரியுமா?எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கட்சி அதிக அளவில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.எங்களது கட்சி கடந்த ஒரு வருடமாக அதிக அளவில் செல்வாக்கு பெற்று வந்ததால் அதனைத் தடுக்க இவ்வாறுநடந்துள்ளது. உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று யாராவது கேட்டார்களா.?
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பல சுயேச்சைகள் உள்பட வேட்பாள்கள் தங்களது வீட்டில் இருந்த நகை,பொருட்களை வைத்து செலவு செய்துள்ளனர். அதெல்லாம் இப்போது வீணாகி விட்டது. டிஜிபியும், கமிஷனரும்,தேர்தல் ஆணையம் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுகிறார்கள்.
ஒரு புகாரும் வரவில்லை என்கிறார்கள். எந்தப் புகாரை இவர்கள் வாங்கினார்கள்? புகார் கொடுக்கசென்றவர்களையே அடித்து விரட்டியிருக்கிறார்கள். கருணாநிதி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார். தொல்காப்பியம்,திருக்குறள், இலக்கியம் பற்றிப் பேசுகிறார்.
இவ்வளவு பேசிய இவர், அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். இவருக்கு இப்படிப்பட்ட பதவிதேவைதானா? நூற்றுக்கு நூறு என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த அராஜகம் தான் நூற்றுக்கு நூறு சாதனையா? காலை 9மணிக்கே வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு முடிந்து விட்டது. கருப்பு நிற பேன்ட்டும், வெள்ளை நிற சட்டையும்போட்டிருந்த குண்டர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளைப் போட்டுள்ளனர்.
அவர்களை காவல்துறையும் தடுக்கவில்லை. தடுக்கக் கூடாது என்பது மேலிடத்தின் உத்தரவு. இப்படிப்பட்டஆடையைப் போடுபவர் யார் தெரியுமா.? ஸ்டாலின் தான். கருப்பு நிற பேன்ட்டும், வெள்ளை நிற சட்டையும்அணிவது அவர் வழக்கம். எனவே இந்த அராஜகத்திற்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார். வாக்குச் சாவடிகளை மூடி விட்டு ஓட்டுப்போட்டால் பிரகாசமாகத்தானே இருக்கும். எங்கே மறு தேர்தல் நடத்த உத்தரவிடுங்கள் பார்ப்போம்.
எனக்கு பத்திரிக்கையாளர்களைத் தவிர வேறு யாரும் ஆதரவு இல்லை. தெய்வம் ஒன்று இருக்கிறது. அதுபார்த்துக் கொள்ளும் என்றார் விஜயகாந்த். பேட்டியின்போது அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ரா வசந்தன் ஆகியோரும் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications