ஜெ. மீது கிரிமினல் வழக்கு: கருணாநிதி
சென்னை:
தேர்தல் வன்முறைக்கு சதி செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சென்னை மாநகராட்சிக்குநடந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக கூட்டணியினர், குறிப்பாக அதிமுகஎம்.எல்.ஏ.க்கள் 2001ம் ஆண்டு செய்தது போலவே இந்த தேர்தலிலும் பெரும் அராஜகங்களைவிளைவித்தார்கள்.2001ல் அதிமுக நடத்திய வன்முறை வாக்குப் பதிவு சம்பங்களால் 36 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவு நடந்தது.ஆனால் தற்போது அதிமுகவினரின் அராஜகங்களையும் மீறி 53 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
2001ல் அதிமுகவினர் அராஜகங்களால் 43 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் தற்போது17 வாக்குச சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்த அராஜகங்கள் முன் கூட்டியே திட்டமிட்டு நடந்தவை. அன்று காலை முதலே ஜெயா டிவியில், குடியரசுத்தலைவருக்கு மனு அனுப்புங்கள், தேசிய மனித உரிமை ஆணையருக்கு மனு அனுப்புங்கள் என்று தங்களதுகட்சியினரையும், ஆதரவாளர்களையும் அதிமுக தலைமை கேட்டுக் கொண்டதே இதற்கு நல்ல சாட்சி.
2001ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில்ஏராளமான திமுகவினரை அதிமுக அரசு கைது செய்தது. அப்போதும் சேகர்பாபுதான் கதாநாயகனாக இருந்தார்.இப்போதும் சேகர்பாபு தான் கதாநாயகன்.
அப்போது சென்னையில் மட்டுமின்றி, அருப்புக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, சந்தைவாசல் என பலவெளியூர்களிலும் பெரும் வன்முறைகள் நடந்தன. 2வது கட்டத் தேர்தலிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இப்போது நடந்த தேர்தலில் 153வது வட்ட திமுக செயலாளர் துளசிங்கம் தாக்கப்பட்டு கண் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோபோல மேலும் பல திமுகவினரும் தாக்குதலில்காயமடைந்துள்ளனர்.
அவர்களை அமைச்சர் ஸ்டாலின் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார்.ஜெயலலிதா வன்முறையைத் தூண்டி விடும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது தனியாக கிரிமினல்வழக்குப் போடுவதைப் பற்றி யோசிப்போம். ஒரு சதி நடைபெற்றுத்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்.விரைவில் நரகாசுர வதம் நடைபெறும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று பேசியிருக்கிறார்கள்.
கொலை முயற்சி செய்வதைப் போல அப்பட்டமாக அவர்கள் பேசியிருப்பதற்கு பின்னால் ஒரு சதி இருப்பதாகஉளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தள்ளது. அதுகுறித்த சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
2001ல் தான் காவல்துறை செயல்படத் தவறியது. 2006ல் காவல்துறை தனது கடமையை சரியாக செய்தது.சேகர்பாபு எம்.எல்.ஏ. வாக்குப் பெட்டியை வெளியே எடுத்துச் சென்று அதனுள் தண்ணீரை ஊற்றியிருக்கிறார்.இது என்ன முறை? வாக்குச் சீட்டுக்களுக்கு நெருப்பு வைக்காததால் அது நல்ல முறையா?
வன்முறைகள் நடக்கவே இல்லை என்று நான் சொல்ல தயாராக இல்லை. அதனால் தான் 17 பூத்துகளில் மறுவாக்கப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் 2001ல் நடைபெற்ற அளவுக்கு வன்முறை அராஜகங்கள் இப்போதுநடைபெறவில்லை.விஜயகாந்த் குறித்து தயவு செய்து கேட்காதீர்கள். நான் அவரைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஆனால் நான்பேசியதாக அவராக கற்பனை செய்து கொண்டு என்னைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு நான் என்ன செய்வது?
சிறையில் இருந்த குற்றவாளிகளை பரோலில் விடுவித்து வன்முறையில் ஈடுபடுத்துவதாக கூறுபவர்கள், யார் யார்அப்படி விடுவிக்கப்பட்டார்கள், யார் யார் சிறையில் இருந்தார்கள் என்பதை தெளிவாக பட்டியலிட்டுச் சொல்லவேண்டும்.
சிக்குன்குனியா பட்டியலைப் போல அல்லாமல் இட்டுக் கட்டிக் கூறாமல் உண்மையை சொல்ல வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், திமுகவுக்கும் இடையே இடப் பங்கீடு தொடர்பாக சில தகவல்பரிமாற்ற குழப்பங்கள் நடந்து விட்டன. தேர்தல் பணியில் இருந்ததால் நானும், அன்பழகனும் இதை சரியாககவனிக்க முடியாமல் போய் விட்டது.
இதனால் கட்சியினர் நிர்ப்பந்தத்திற்காக கூடுதலாக ஓரிரு இடங்களில் அவர்கள் போட்டியிட நேரிட்டு விட்டது.இதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications