டிஜிபியே ஓட்டுப் போட முடியாத அவலம்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது தமிழக போலீஸ் பயிற்சிப் பிரிவு டிஜிபி ரமணியும், அவரதுமனைவியும் ஓட்டுப் போட முடியாமல் திரும்பிச் சென்ற சோகம் நடந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 155 வார்டுகளிலும் பெரும் வன்முறையும்,கலவரமும் நடந்ததால் பெரும்பான்மையான பொதுமக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.சரமாரியான கள்ள ஓட்டு, வெட்டுக் குத்து என பெரும கலவரத்தை சந்தித்து முடிந்தது சென்னை மாநகராட்சிதேர்தல். இந்த நிலையில், தமிழக போலீஸ் பயிற்சி டிஜபி ரமணியும், அவரது மனைவியும் ஓட்டுப் போட வாக்குச்சாவடி வரை வந்து விட்டு, நடந்த கலவரத்தால் ஓட்டுப் போட முடியாமல் திரும்பிய சம்பவம் குறித்த தகவல்வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளிக் கூட வாக்குச் சாவடிக்குரமணி சென்றுள்ளார். ஆனால் வாக்கு சாவடி மூடப்பட்டிருந்தது. இதனால் குழம்பிப் போன அவர் அங்கும்இங்கும் பார்த்துள்ளார்.
அப்போது சீருடையில் இல்லாத ஒரு காவலர் ரமணியை அடையாளம் கண்டுகொண்டு வந்துள்ளார். இங்குகலாட்டா நடப்பதால் வாக்குச் சாவடியை மூடி விட்டார்கள், நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று அந்தக் காவலர்கூறியுள்ளார்.
இதையடுத்து டிஜிபியின் மனைவி மாலையில் வேண்டுமானால் வரலாமா என்று கேட்டுள்ளார். மாலையிலும்வரவேண்டாம். வாக்குச் சாவடியையே மூடி விட்டார்கள் என்று கூற டிஜிபியும், அவரது மனைவியும் கடும்ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் எதுவும் பேச முடியாமல் இருவரும் தங்களது வீட்டுக்குத் திரும்பினர். டிஜிபியே ஓட்டுப் போடமுடியாமல் சத்தம் போடாமல் திரும்பிச் சென்றதைப் பார்த்த அப்பாவி வாக்காளர்கள், டிஜபிக்கே இந்தநிலைமையா என்று நொந்து போய் வீட்டுக்குத் திரும்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications