லத்திகா சரணை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை:
சென்னை அருகே திருவொற்றியூரில் கள்ள ஓட்டு போட்டவர்களை கைது செய்யக் கோரி சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
திருவொற்றியூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று காலை 10 மணியளவில் சிலர் கும்பலாக வந்து வாக்குச்சாவடிக்குள் புகுந்து கள்ள ஓட்டுப் போட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், அவர்களின்ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் வந்தார். அவரைப் பார்த்ததும் அனைவரும்அவரை முற்றுகையிட்டு கள்ள ஓட்டுப் போட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை லத்திகா சரண் சமாதானப்படுத்தினார். முறையான ஆவணங்களை வைத்துள்ளவர்களை ஓட்டுப் போடஅனுமதிக்குமாறும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அங்கு அமைதிதிரும்பியது.
இதேபோல புழல் பகுதியிலும் சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்துச் சென்ற சம்பவம்நடந்தது. இதனால் பலர் ஓட்டுப் போடாமல் திரும்பிச் சென்றனர்.
ஸ்ரீரங்கம்:
இதற்கிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலைதகவல் பரவியது. இதனால் அங்கு போலீஸார் அதிகப்படுத்தப்பட்டனர்.
அப்பகுதியில், யாரும் ஓட்டுப் போடாமல் தடுக்கும் வகையிலேயே இந்த வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அதிமுக வேட்பாளரின் கார் எரிப்பு:
திருச்சி உறையூரில் அதிமுக வேட்பாளர் வனிதாவின் காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உறையூரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் நடுநலைப் பள்ளி வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வனிதாவின் காரை சிலர் தீவைத்துக் கொளுத்தினர்.இதைக் கேள்விப்பட்டதும் அங்கு விரைந்து வந்த வனிதாவும், 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்குபரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications