அதிமுக வேட்பாளர்களை மிரட்டவில்லை: திமுக
சென்னை:
சென்னை மற்றும் மதுரை மாநகராட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்களைமிரட்டி திமுகவில் சேர்க்கவில்லை என திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மேரி மற்றும் சியாமளா ஆகியோரும், மதிமுகவேட்பாளர் அம்பிகாபதியும் வெள்ளிக்கிழமை நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் திமுகவில் சேர்ந்தனர்.இதேபோல மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் கட்சியிலிருந்துவிலகிய மதிமுக வேட்பாளர் மகபூப் பாட்சாவும் திமுகவில் சேர்ந்தார்.இவர்களை திமுக மிரட்டி கட்சியில் சேர்த்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஆற்காடு வீராசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிக வேட்பாளர்கள் மேரி டேனியலும், சியாமளாவும்தாங்களாகவே விரும்பித்தான் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக அராஜக கட்சி, ஜனநாயகத்தில் நம்பிக்கைஇல்லாத கட்சி என்பதை புரிந்து கொண்ட பின்னர்தான் அவர்கள் திமுகவுக்கு வந்துள்ளனர்.
இதேபோலத்தான் மதிமுகவைச் சேர்ந்த அம்பிகாபதி, மதுரை மகபூப் பாட்சா ஆகியோரும் தாங்களாக முன்வந்துதிமுகவில் இணைந்துள்ளனர். யாரும் யாரையும் மிரட்டி அழைத்து வரவில்லை.
அதிமுக அழியத் தொடங்கி விட்டது. அதனுடன் கூட்டணி வைத்துள்ள மதிமுகவுக்கும் அதே நிலைதான். இதைத்தடுக்கும் வகையிலும், தொண்டர்களை ஏமாற்றும் வகையிலும், ஏதோ நாளைக்கே ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவது போலவும், அப்படி வந்தால் அதிகாரிகளையெல்லாம் பழிவாங்குவேன் என்றும் ஜெயலலிததான் மிரட்டிவருகிறார்.
ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் இனி எதிர்காலம் கிடையாது. எனவேதான் அந்தக் கட்சியிலிருந்து பலரும்ஆங்காங்கே திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து அணுகி வருகின்றனர்.
எதிர்காலத்தில் கட்சித் தொண்டர்கள் தன்னை தனி மரமாக்கி விட்டு ஓடிப் போய் விடுவார்களோ என்றபயத்தில்தான் இப்போது அறிக்கை மேல் அறிக்கையாக ஜெயலலிதா விட்டுக் கொண்டுள்ளார். அவர் சந்திக்கும்கடைசித் தேர்தல் இதுதான் என்று கூறியுள்ளார் வீராசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications