சென்னைக்கு மறு தேர்தல்: ஆளுநரிடம் பாஜக மனு
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி தமிழக பாஜக சார்பில் ஆளுநர்பர்னாலாவிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர்பர்னாலாவை ஆளுநர் மாளிகையில் சென்று சந்தித்தனர். ஆளுநரிடம் அப்போது இல.கணேசன் மனு ஒன்றைஅளித்தார்.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில்தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சலுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
முன்னதாக பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், சென்னை மாநகராட்சிக்குநடந்தது தேர்தலே அல்ல. தேர்தல் முடிந்த பிறகுதான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிய வரும்.ஆனால் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதாலோ என்னவோ, உளவுத்துறை மூலமாக முன் கூட்டியே மக்கள் தீர்ப்புஎன்னவாக இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு குண்டர்கள் மூலம் வெற்றியைத் தட்டிப் பறிக்கமுயன்றுள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் திட்டமிட்டே திமுக மற்றும் பாமக ஆகியவை அராஜகத்தில் ஈடுபட்டன. கடந்த அதிமுகஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலின் போது வன்றை நிடந்ததாக தல்வர் கருணாநதி கூறியுள்ளார். அப்படிக்கூறுவதன் மூலம் இப்போது நடந்த வன்முறை நியாமாகி விடாது.
மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். வாய்ப்பிருந்தால் மின்னணு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்.நீதிமன்ற பார்வையாளர்களைக் கொண்டு, ராணுவத்தின் உதவியோடு, தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள்கோருகிறோம்.
எங்களது இந்தக் கோரிக்கை அடங்கிய மனுவை மாநகர காவல்துறை ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோர்பெற்றுக் கொள்ளவில்லை. எனவே பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளோம்.
தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவு மூலம் வழக்கும்தொடர்ந்துள்ளோம் என்றார். கட்சியின் பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளார் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications