சென்னையில் நடந்தது மோசடித் தேர்தல்: சிபிஎம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு நடந்தது மோசடித் தேர்தலாகும். இதை உடனடியாக ரத்து செய்து விட்டு மீண்டும்தேர்தல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குஎண்ணிக்கை மற்றும் சைதாப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் போன்ற சட்டசபை இடைத் தேர்தல்களில்அதிமுக நடத்திய அத்துமீறல்கள் தமிழகம் அறிந்தவை.அந்த நடவடிக்கைகளையும், அதேபோன்று ஒவ்வொரு விஷயத்திலும் கையாண்ட மக்கள் விரோத, எதேச்சதிகாரநடவடிக்கைகளையும் ஒழித்துக் கட்டத்தான் 2006 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனும், இதர கட்சிகளுடனும்இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது.
அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்கள் தூக்கியெறிந்தனர். எதேச்சதிகாரமா, ஜனநாயகமா என்பதைசட்டமன்றத் தேர்தலின் அடிப்படை முழக்கமாக இருந்தது. இந்த பின்புலத்தில் அக்டோபர் 13 அன்று நடந்தஉள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பவையாகும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 வார்டுகளில் போட்டியிட்டது. இங்குதிமுகவுடன் உடன்பாட ஏற்படவே இல்லை.
தேர்தல் நாளன்று மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிட்ட 8 வார்டுகளிலும் நடந்த வன்முறைச் சம்பவங்களும்,வாக்குச் சாவடிகளை கைப்பற்றி நடத்திய மோசடி வாக்குப் பதிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தென் சென்னை, வட சென்னை மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள், காவல்துறைஉயர் அதிகாரிகள் என பல தரப்பினரிடம் காலையிலிருந்தே புகார் செய்தனர்.
ஆனால் அந்தப் புகார்களை வாங்கவோ அல்லது வழக்குப் பதிவு செய்யவோ யாரும் முன்வரவில்லை. இந்தவிவரங்கள் அனைத்தும் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன.
ஆயுதம் தாங்கிய தொழில்முறை ரவுடிக் கும்பல்களுக்கு திமுக வேட்பாளர்களும், சில சட்டமன்றஉறுப்பினர்களும் தலைமை தாங்கி வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து தேர்தல் கவர்களை விரட்டியடித்து விட்டுவிருப்பம் போல வாக்குச் சீட்டுக்களை முத்திரையிட்டு வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர்.
தட்டிக் கேட்க முயன்ற எங்களது கட்சி தேர்தல் முகவர்கள், தொண்டர்கள், வேட்பாளர் தேவி போன்றோரைகத்திகளால் வெட்டியும், எட்டி உதைத்தும் தடிகளால் காயப்படுத்தியும் உள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் கேலிக் கூத்தாக உள்ளன. சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டிநடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எங்களதுகட்சித் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடித் தேர்தலை ரத்துசெய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications