லண்டனில் அவதியுற்ற இந்திய விமான பயணிக
டெல்லி:
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும்அவதிக்குள்ளாகி 3 நாட்களாக பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக நேற்று தலைநகர் வந்து சேர்ந்தனர்.
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து 434 பயணிகளுடன் வியாழக்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம்கிளம்பியது. இந்த விமானம் நியூயார்க்கிலிருந்து லண்டன், டெல்லி வழியாக மும்பை செல்வதாகும். கிளம்பியசுமார் அரை மணி நேரத்திலேயே பறவை தாக்கியதால் விமானம் பாதிப்படைந்தது.இதையடுத்து உடனடியாக ஹீத்ரூ விமான நிலையத்திற்கே விமானம் திருப்பி விடப்பட்டது. பயணிகள்அனைவரும் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களை வேறு விமானத்தில் அனுப்புவதற்கோ, விமான பயணிகளுக்குத் தேவையான வசதிகளைசெய்து கொடுப்பதற்கோ ஏர் இந்தியா அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் லண்டன் ஹோட்டல்களிலேயே சிக்கி அவதியுறும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது. கடந்த மூன்றுநாட்களாக அவதிப்பட்டு வந்த பயணிகளுக்கு நேற்று ஒரு வழியாக விடிவுகாலம் பிறந்தது.
நேற்று பிற்பகல் 300க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். விமானத்தை விட்டுஇறங்கியதும் ஏர் இந்தியா அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள் ஏர் இந்தியாவின் மெத்தனப் போக்கைகடுமையாக சாடினர்.
தங்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்காமலும், மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்யாமலும், ஏர் இந்தியாநிறுவனம் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மிகவும் மோசமானஹோட்டல்களில் தாங்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications