அறுக்க அறுக்க மின்னும் வைரம் அதிமுக: ஜெ.
சென்னை:
அறுக்க அறுக்க மின்னும் வைரம்தான் அதிமுக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதிமுகவினருக்கு ஜெயலலிதா வாழ்த்துமடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இதயதெய்வம் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக இன்றோடு 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிற பொன்நாள் அதுவே நமக்கு நன்னாள்.சோதனைகள், வேதனைகள், துரோகங்கள், துன்பங்கள், கண்ணீர் காயத்தைக் கடந்து தான் நாம் வந்திருக்கிறாம்.தோல்வி நம்மை பன்மடங்கு பலசாலி ஆக்குகிறது என்றால் வெற்றி நமக்குப் பணிவையும், மாண்பையும் கற்றுத்தருகிறது. அடிக்க அடிக்க பந்து உந்துமே அதைப் போல.
அறுக்க அறுக்க வைரம் மின்னுமே, அதைப் போல கழகம் வலுவோடும், பொலிவோடும் வளர்ந்து கொண்டு தான்இருக்கிறது.
நெருப்பாற்றில் நீந்தி வந்த கழகம் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தாங்கி நின்று வென்று காட்டிடும்வீரம் தான் நம்முடைய கவரியாகும்.மக்கள் நமக்குத் தந்திருக்கின்ற மகத்தான தீர்ப்பு என்ன தெரியுமா?
பலவீனமான ஆளுங்கட்சி, பலமிக்கதொரு எதிர்க்கட்சி! தமிழக மக்களுக்கு நன்மை செய்வதை விட்டு விட்டுஏழை மக்களின் துயரத்தை துடைப்பதை விட்டு விட்டு கருணாநிதியின் கவனம் முழுவதும் என் மீதும், கழகத்தொண்டர்கள் மீதும் பொய்யான, வழக்குகளைப் போட்டு கழகத்தை முடுக்கி விட அரசு இயந்திரத்தையும்,காவல்துறையையும் பயன்படுத்துவதிலேயே உள்ளது.
இந்த போக்கு என்னிடம் பலிக்காது. கழகத் தொண்டர்கள் இதுபோன்ற சோதனைகளைத் தாங்கி சிங்கம் போலஎழுந்து நிற்பவர்கள். இதுபோன்ற கவலைகள் எல்லாம் இடி இடிக்கும், மேகங்களைப் போன்றவைதான்.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவை கடுமையாகத் தோன்றும். ஆனால் அவை நம்மை நெருங்க நெருங்கசக்தியிழந்து நமக்குப் பயன் தரும் மழையாகவும் ஆகி விடக் கூடும். மக்கள் வெற்றி என்கிற பரிசை நமக்குவழங்கக் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications