புலிகள் தாக்குதலில் 103 வீரர்கள் பலி
கொழும்பு::
இலங்கையில் ராணுவ வாகனங்களின் அணி வரிசை மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் கொழும்பிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹபரானா என்றஇடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திரிகோணமலையிலிருந்து கடற்படை வீரர்கள்அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வீரர்கள் வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீது இன்று வெடிகுண்டுகள்நிரப்பப்பட்ட ஒரு லாரி பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் 103 கடற்படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாயினர்.
15க்கும் மேற்பட்ட பேருந்துகள் தூள் தூளாகின. இந்த சம்பவம் குறித்து தேசியபாதுகாப்பு மைய செய்தித் தொடர்பாளர் கொழும்பில் செய்தியாளர்களிடம்பேசுகையில், கடற்படை வீரர்கள், பொதுமக்கள் உள்பட 103 பேர் பலியாகியுள்ளனர்.சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 60 பேர்காயமடைந்துள்ளனர் என்றார்.
ஜெனீவாவில் வருகிற 28, 29ம் தேதிகளில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்ததாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட, கிழக்கு மாகாண இணைப்பு செல்லாது:
இதற்கிடையே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்ததுசெல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம்ஏற்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர்ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாகஇணைக்க முடிவு செய்யப்பட்டது. இன்று வரை இரு மாகாணங்களும்இணைக்கப்பட்ட நிலையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை நிரந்தரமாக இணைப்பது தொடர்பாக நாடு முழுவதும் கருத்துக் கணிப்புநடத்தி இணைக்கலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரைஅப்படி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை. இதனால் தொடர்ந்து தற்காலிகஇணைப்பை நீட்டித்து ஆண்டுதோறும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது இலங்கைஅரசு.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரி சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சரத் சில்வா தலைமையிலானஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தது செல்லாது. இது சட்டவிரோதநடவடிக்கையாகும். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை ஆகிய மாவட்டங்கள்இணைந்த கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications