33 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்-ஜெ அதிரடி
சென்னை:
அதிமுகவின் கொள்கை குறிக்கோளுக்கு எதிராக செயல்பாட்டதாக 33 அதிமுக நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டகாரணத்தினாலும் நீலகிரி மாவட்ட ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் லட்சுமணன்,
ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணி என்ற மனோகரன், குன்னூர் ஒன்றிய பொருளாளர்ராஜேந்திரன், உதகமண்டலத்தை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பார்வதி உள்பட 33நிர்வாகிகள் இன்று முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் பெறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில்இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
மேலும் அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என ஜெயலலிதாகூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
