பஸ் தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.

தீபாவளி போனஸ் தொடர்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன்அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று மாலை நடந்தது.

இதில் 12 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருபேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர்போனஸ் குறித்த அரசின் கருத்தை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் நேரு தெரிவித்தார்.

அதன்படி 8.33 சதவீத போனஸும், 11.67 சதவீத கருணைத் தொகையும் என மொத்தம் 20 சதவீத போனஸ்வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக நேரு தெரிவித்தார். இதை ஏற்க முதலில் தயக்கம் காட்டிய தொழிற்சங்கத்தினர்பின்னர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த 20 சதவீத போனஸ் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 12 ஆயிரம்தொழிலாளர்கள் பயன் பெறுவர். அரசுக்கு ரூ. 68 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதேபோல கடந்த 2001ம் ஆண்டு தீபாவளி போனஸ் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 17 நாட்கள் நடந்த இப்போராட்டம் நடந்தது. பின்னர் தொழிலாளர்கள்வேலைக்குத் திரும்பினர். வேலைநிறுத்தம் செய்த 17 நாட்களுக்குரிய ஊதியத்தை அப்போதைய ஜெயலலிதாஅரசு நிறுத்தி வைத்திருந்தது.

இந்த வேலை நிறுத்த நாட்களுக்குரிய சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என்று திமுக தொழிற்சங்கமானதொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தன. இதை அரசு ஏற்றுக் கொண்டு, 17நாட்களுக்குரிய ஊதியமும், போனஸுடன் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 33கோடியே 95 லட்சம் ரூபாய் செலவாகும்.

இந்த இரு தொகைகளும் இன்றே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோல மின்வாரிய ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின், தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்களுக்குரிய போனஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+