போலி எப்ஐஆர்: வக்கீல் வீட்டில் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

கடலூர்:போலி எப்.ஐ.ஆர். வழக்கில் தொடர்புடைய கடலூர் வழக்கறிஞர் வீட்டில் இன்றுசிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

போலி எப்.ஐ.ஆரைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணத்தை மோசடிசெய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐவிசாரணை நடந்து வருகிறது.

விசாரணையின் ஒரு கட்டமாக கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவமணி என்பவரின்வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கடலூர் சீதாரம் நகரில்சிவமணியின் வீடு உள்ளது.

இங்கு இன்று காலை சென்னையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டைப் பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். உதவி எஸ்.பி. சுந்தரராஜன் தலைமையிலானசிபிஐ குழுவினர் காலை 7 மணிக்கு சோதனையைத் தொடங்கி பிற்பகல் 12மணிவாக்கில்தான் முடித்தனர்.

சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இருப்பினும்இதுகுறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்க சுந்தரராஜன் மறுத்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+