தேமுதிகவுக்கு அங்கீகாரம் கோரும் மனு தள்ளுபடி
டெல்லி:விஜய்காந்தின் தேமுதிக கட்சியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தேர்தல் சின்னங்கள் சட்டத்தின் கீழ் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி தேமுதிக மனுசெய்திருந்தது.
அதில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 8.33% வாக்குகள் பெற்றுள்ளோம். ஒரு எம்எல்ஏவைப் பெற்றுள்ளோம்.
ஒரு கட்சி குறைந்த பட்சம் 6% வாக்குகளையும், இரண்டு எம்எல்ஏக்களையும் பெற்றிருந்தால் தான் மாநிலக்கட்சியாக அங்கீகாரம் அளிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
ஜனநாயகத்தில் எப்போது எந்த மாதிரியான சூழ்நிலை வரும் என்று முன்னதாகவே சொல்ல முடியாது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேமுதிகவுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம்உள்ளது.
விதிகளைத் தளர்த்தி தேமுதிகவை மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கவும், 8.33% வாக்குகளைப் பெற்றுள்ளதங்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
முரசு சின்னத்தை ஒதுக்காவிட்டால், கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் பாதமாக அமையும்.
இவ்வாறு தேமுதிக தனது மனுவில் தெரிவித்திருந்தது.
தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலஜியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன்,டிகே.ஜெயின் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அக்கட்சி தனது கோரிக்கையை அதற்குரிய அமைப்பிடம் (தேர்தல்ஆணையத்திடம்) தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications