சென்னை: 27 சாவடிகளில் மறு வாக்குப் பதிவு
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை 20ம் தேதி எண்ணலாம் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், வாக்குஎண்ணிக்கைக்குத் தடை கோரியும் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. நேற்று தேர்தல் ஆணையர்சந்திரசேகரன், மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை நேரில் வரவழைத்துவிசாரணை நடந்தது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதனால் சென்னையில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கைநடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல்ஆணையம் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் விடுதலையும், அதிமுக சார்பில்ஜோதியும் ஆஜராகினர்.
வழக்கறிஞர்களின் வாதம் இன்று மாலை முடிவடைந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம்சூடான விவாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர்.அதன்படி 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுநடைபெற வேண்டும்.
அதைத் தொடர்ந்து 155 வார்டுகளிலும் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கையைநடத்தலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications