ராதிகாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா
சென்னை:நடிகை ராதிகாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சிப் பொதுச் செயலாளர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார், ஜெயலலிதாவைஆண்டிப்பட்டியில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் மனைவி ராதிகாவும் அதிமுகவில்சேர்ந்தார். இருவருக்கும் அப்போது ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
ஆனால் சரத்குமாரின் கட்டாயத்தின் காரணமாகவே ராதிகா அவருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்றுஅப்போது கூறப்பட்டது. அதை நிரூபிப்பது போல சரத்குமாருடன் ஜெயலலிதாவை சந்தித்ததோடு சரி, அதன்பின்னர் அதிமுக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் ராதிகா கலந்து கொள்ளவில்லை. அதிமுகவுக்காக தேர்தல்பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை.
மேலும், ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் சன் டிவியில் தொடர்ந்துஒளிபரப்பாகி வந்தன.
இந் நிலையில் ராதிகாவை கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக நடந்துவரும் நடிகை ராதிகா, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டார்.
எனவே இன்று முதல் ராதிகா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சித்தொண்டர்கள் ராதிகாவுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராதிகாவுடன் அதிமுவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருப்பது,அதிமுக உறுப்பினரான நடிகர் சரத்குமாருக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.
ஆண்டிப்பட்டியில் வைத்து அதிமுக உறுப்பினர் அட்டையை ராதிகாவிடம் தந்தார் (அல்லது திணித்தார்)ஜெயலலிதா. இப்போது அதைப் பறித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications