ராக்கெட் ரகு ஆந்திராவில் சரண்!
வாரங்கல்:சென்னை ராக்கெட் லாஞ்சர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சீனிவாசரெட்டி என்கிற டெக் ரகு ஆந்திர மாநிலம் வாரங்கலில் தனது மனைவியுடன்போலீஸில் சரணடைந்தார்.
சென்னை அம்பத்தூர் அருகே தனது மனைவி சுதாராணி என்கிற வசந்தாவுடன் வசித்துவந்தவர் ரகு. இருவரும் ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு என்றநக்சலைட் அமைப்பில் உறுப்பினர்கள் ஆவர்.
பொறியாளரான ரகு, அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலைகளில் ராக்கெட் லாஞ்சர்களைஆர்டர் கொடுத்துத் தயாரித்து அவற்றை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார்.கடைசி முறையாக அவர் அனுப்பியபோது ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டபோலீஸார் ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அம்பத்தூரைச் சேர்ந்த 7தொழிற்சாலை ஊழியர்கள், அதிபர்கள் சிக்கினர். ரகுதான் தங்களுக்கு ராக்கெட்லாஞ்சர்களை தயாரிக்க ஆர்டர் கொடுத்துத என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து ரகுவையும், அவரது மனைவி சுதாராணியையும் போலீஸார் தேடிச்சென்றனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர். தமிழக போலீஸாரும்,ஆந்திர போலீஸாரும் ரகுவையும், மனைவியையும் பிடிக்க தீவிரமாக தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரும் வாரங்கலில் நேற்றுசரணடைந்தனர். மாவட்ட எஸ்.பி. செளம்யா மிஸ்ரா முன்னிலையில் இருவரும்சரணடைந்தனர்.
ரகுவின் உண்மையான பெயர் சீனிவாச ரெட்டி என்கிற டெக் மது என அப்போதுதெரிய வந்தது. சென்னையில் பொறியியல் நிறுவனம் ஒன்றை நான்கு வருடங்களுக்குமுன்பு ஆரம்பித்துள்ளார் மது.
அந்த நிறுவனத்தின் மூலம் 1000 ராக்கெட்டுகள் மற்றும் லாஞ்சர்களைத் தயாரித்துநக்சலைட்டுகளுக்கு வழங்கியுள்ளார். இப்படி இவர் அனுப்பிய ராக்கெட் லாஞ்சர்கள்இருந்த லாரியைத்தான் மகபூப் நகர் போலீஸார் கடந்த செப்டம்பர் 9ம் தேதி மடக்கிப்பிடித்தனர்.
போலீஸ் தனக்கு வலை வீசியிருப்பதை அறிந்த மது, இனிமேலும் தலைமறைவாகஇருக்க முடியாது என்பதால்தான் சரணடையை விருப்பம் தெரிவித்து ஆந்திர மாநிலபோலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மது சரணடைய போலீஸார்ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி மது தற்போது சரணடைந்துள்ளார்.
இருவரும் இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கியூபிரிவு போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மது சரணடைந்து விட்டதால் ராக்கெட் லாஞ்சர் விவகாரத்தில் பெரும் திருப்பம்ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி விவகாரங்கள் குறித்த பல தகவல்கள் தெரிய வரும்என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க ஆந்திர போலீஸார்திட்டமிட்டுள்ளனர். சம்பவம் இங்கு நடந்துள்ளதால் சென்னை போலீஸாரும்விசாரணை நடத்தவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications