பதவி உயர்வில் இடஒதுக்கீடு- நீதிமன்றம் அனுமதி
டெல்லி:அரசு வேலையில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும்அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இருப்பினும் இது 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என நீதிமன்றம்தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு வேலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடுஅடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவது கடந்த நடைமுறையில் இருந்துவருகிறது.
கடந்த 1992ம் ஆண்டு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது.
இதையடுத்து பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வசதியாக கடந்த1995ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அரசியல்சட்டத்தின் 77, 81, 82, 85வது பிரிவுகளில் அரசு இதுதொடர்பாக திருத்தம் கொண்டுவந்தது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன்,கபாடியா, சி.கே.தாக்கூர், பி.கே. பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இன்று தீர்ப்பளித்தது.
அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்ய வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்தங்கள் செல்லும். இந்த இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர்பிரிவை சேர்க்கக் கூடாது.
மேலும் பதவி உயர்வின்போது, ஒட்டமொத்த நிர்வாகத் திறமையையும் கணக்கில்எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதத்திற்கு மேல்போகாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அதுகடைப்பிடிக்கப்படாவிட்டால், அரசியல் சட்டத்தின் 16வது பிரிவு அர்த்தமற்றதாகிவிடும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications