அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி:நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகம்மதுஅப்சல் குருவுக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அப்சலுக்குஉச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அக்டோபர் 20ம்தேதி (இன்று) அப்சலை தூக்கிலிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்சலுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரி அவரதுமனைவி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனுதொடர்பாக அப்துல் கலாம் இதுவரை முடிவு எதையும் அறிவிக்கவில்லை.
இதனால் திட்டமிட்டபடி அப்சல் தூக்கிலிடப்படுவாரா என்பதில் சந்தேகம் எழுந்தது.இந் நிலையில் இன்று காலை திட்டமிட்டபடி அப்சல் தூக்கிலிடப்படவில்லை.குடியரசுத் தலைவர் முடிவு அறியப்படும் வரை அப்சல் தூக்கிலிடப்பட மாட்டார் எனமத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் தூக்கு கைதிக்கு கலாம் கருணை:
இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருணை காட்டி ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.
தற்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் உள்ளிட்ட 20 பேரின்கருணை மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இந் நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயது தூக்குத் தண்டனைக் கைதிக்கு கருணை காட்டி அவரது தண்டனையை ஆயுறள் தண்டனையாக கலாம்மாற்றியுள்ளார். கலாமால் கருணை காட்டப்பட்ட அந்தக் கைதியின் பெயர் கீரா ராஜ்குமார். இவர் 1992ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி தனதுமனைவி, 2 குழந்தைகள் மற்றும் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. இதைஎதிர்த்து அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்டதூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து ராஜ்குமார் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் கலாம்,ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications