சென்னை மாநகராட்சியையும் கைப்பற்றியது திமுக
சென்னை:சென்னை மாநராட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.அதிமுகவுக்கு வெறும் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 12வார்டுகளுக்குரிய 27 வார்டுகளில் மட்டும் நேற்று முன்தினம் மறு வாக்குப் பதிவுநடந்தது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மீதமுள்ள 143 வார்டுகளில்பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை தான் முடிவடைந்தது.
மொத்தம் உள்ள 155 வார்டுகளில் 90 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 38 வார்டுகளையும், பாமக 17 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி 2 வார்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
அதிமுக வெறும் 4 வார்டுகளில் மட்டுமே வெற்ற பெற்றுள்ளது. அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கூட ஒரு இடத்தில் வென்று காட்டியுள்ளது.
இதன் மூலம் மற்ற 5 மாநகராட்சிகளைப் போலவே சென்னை மாநகராட்சித்தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி 8 வார்டுகளில் தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 155இடங்களில் இக்கூட்டணி 149 வார்டுகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாதபலத்துடன் மாநகராட்சிக்குள் நுழைகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications