கைதான அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலைதள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில்வெற்றி பெற்ற ஏராளமான அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கவுன்சிலர்களுக்கான பதவியேற்புநிகழ்ச்சியில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கவுன்சிலராக பதவியேற்காதவர்கள், மேயர், துணை மேயர், தலைவர், துணைத்தலைவர தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அதிமுக கவுன்சிலர்களை நாளை மறுநாள்நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மேலும் அவர்கள் சிறையிலிருந்து வெளி வரும் வரை தலைவர், துணைத் தலைவர்தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்ஜெயக்குமார்.

இந்த மனு நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்றுபிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருக்கும்கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளவும், மேயர், துணை மேயர் தேர்தலில்வாக்களிக்கவும் ஆவன செய்யப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+