ஆந்த்ராக்ஸ்: கிருஷ்ணகிரியில் 17 பசுக்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியுள்ளது.இதுவரை இந்த நோய்க்கு 17 பசுக்கள் பலியாகியுள்ளன. இதனால் அங்கு பீதிநிலவுகிறது.
ஊத்தங்கரை தாலுகாவுக்கு உட்பட்ட காமாட்சிப்பட்டி, திருவரப்பட்டி, ஆலந்தூர்உள்ளிட்ட கிராமங்களில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் 17 பசுக்கள் ஆந்த்ராக்ஸ் காரணமாக இறந்துள்ளன. இது குறித்துமாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் பாபு கூறுகையில்,
பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.இறந்த மாடுகளிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றார்.
சிக்குன்குனியா, டெங்குவைத் தொடர்ந்து தற்போது கால்நடைகளைத் தாக்கும்ஆந்த்ராக்ஸ் கிளம்பியுள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications