அடுத்த சென்னை மேயர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த 3 பேரின் பெயர்கள்அடிபடுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவானவாக்குகள் கடந்த 20ம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக 90 வார்டுகளிலும்,காங்கிரஸ் 38 வார்டுகளிலும், பாமக 17 வார்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

Subramaniஅதிமுகவுக்கு 4 இடங்களும், மதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா 1 இடமும்கிடைத்தன.

மிகப் பெரிய பலத்துடன் திமுக மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்துஅடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேயர், துணை மேயர் தேர்தல்வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

Suresh Kurmarமேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த 3 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. 140வதுவார்டில் போட்டியிட்டு வென்ற மா.சுப்ரமணியம், 130வது வார்டில் போட்டியிட்டுவென்ற தனசேகரன், 86வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோரே அந்த மூவர்.


Dhanasekaranமா.சுப்ரமணியம், கடந்த மாநகராட்சிக் கூட்டங்களில் அனல் பறக்க செயல்பட்டவர்.அமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றவர். அதிமுக ஆட்சியில்சைதாப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

மாநில திமுக இளைஞர் அணி துணைச் செயலாளராகவும், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடுமையான உழைப்பாளியானசுப்ரமணியத்திற்கே மேயராகும் வாய்ப்பு அதிகம் என திமுகவினர் மத்தியில் பேச்சுநிலவுகிறது.

அடுத்து தனசேகரன். இவர் ஒரே நாளில் தமிழகம் முழுக்கப் பிரபலமானவர். கடந்தஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த மழை நிவாரண நெரிசல்சாவு சம்பவத்தை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மழை நிவாரண உதவியைப் பெற காத்திருந்த கூட்டத்தினர் மத்தியில் பெரும் நெரிசல்ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு திமுகவினர்பரப்பிய வதந்தியே காரணம் என கூறிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நகர் கவுன்சிலரானதனசேகரனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தனசேகரனை மீட்டார் முதல்வர்கருணாநிதி. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்திடம் கடும் டோஸ்கிடைத்தது.

தனசேகரனை விடுவிக்கக் கோரி கருணாநிதியே தெருவில் இறங்கி போராட்டமுநடத்தினார். இந்தத் தேர்தலில் அதே வார்டில் இப்போது 5,000க்கும் மேற்பட்டவாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளார்தனசேகரன். இவருக்கும் மேயர் பதவிக்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

அடுத்து சுரேஷ்குமார். இவர் கருணாநிதியின் நிழல் என்று கூறப்படுபவர். காரணம்,முதல்வர் கருணாநிதியின் சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளராக இருக்கிறார்.கருணாநிதி மற்றும் ஸ்டாலினின் அன்பைப் பெற்றவர். அதேசமயம், சுரேஷ்குமாருக்குஎதிராக கட்சிக்குள்ளேயே பல்வேறு சலசலப்புகள் இருப்பதால் சுரேஷ்குமாருக்குமேயர் பதவிக்கான வாய்ப்பு அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்களின் கூட்டம் இன்னும் ஓரிருநாட்களில் நடைபெறவுள்ளது. அப்போது புதிய மேயர் யார் என்பது தெரிந்து விடும்.

துணை மேயராக பெண் கவுன்சிலர்களான சாந்தி பாய், வசந்தி, செல்வி ஆகியோரில்ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

25ம் தேதி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 29ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஸ்டாலின் மேயராக தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு சென்னை மாவட்டசெஷன்ஸ் நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். காரணம், அவர் நேரடியாகதேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்பதால். ஆனால் தற்போதைய மேயர்,கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், அவருக்கு மாநகராட்சி ஆணையரேபதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

29ம் தேதி காலை 9.3 0 மணிக்கு மேயர் தேர்தலும், 11 மணிக்கு துணை மேயர்தேர்தலும் நடைபெறும். இதில் போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள், 25ம் தேதிமுதல் 28ம் தேதி வரை ஆணையரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 21ம்தேதி முதல் இதற்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர் 46வது மேயர் ஆவார். முதல்கூட்டத்தின்போது புதிய மேயர் கருப்பு நிற நீள அங்கி, நூறு பவுன் மதிப்புடைய தங்கசங்கிலி ஆகியவற்றை அணிந்தபடி கூட்டத்தில் கலந்து கொள்வார்.

இந்த தங்கச் சங்கிலி தற்போது வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. முதல்கூட்டத்திற்கான நாள் அறிவிக்கப்பட்டவுடன் அந்த தங்கச் சங்கிலி லாக்கரிலிருந்துஎடுத்து வரப்படும்.

மேயர் அணியும் அங்கி மற்றும் செங்கோல் ஆகியவை மாமன்றத்திலேயேவைக்கப்பட்டுள்ளன. தங்கச் சங்கிலி மட்டும் பாதுகாப்பு கருதி வங்கி லாக்கரில்உள்ளது.

கவுன்சிலர்கள் பதவியேற்பு, மேயர் தேர்தலையொட்டி மாநகராட்சி மாமன்றக் கூட்டஅரங்கம் மற்றும் மேயர் அறை, துணை மேயர் அறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுவருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இக்கட்சி 38 வார்டுகளில்போட்டியிட்டு 38 வார்டுகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு அடுத்து அதிகவார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்துகிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சைதை ரவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆகும்வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+