சேலத்தில் தேமுதிக கவுன்சிலர்கள் கடத்தல்
சேலம்:சேலம் மாவட்டத்தில் 3 தேமுதிக ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கார்களில்கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிகவுக்கு சேலம் மாவட்டத்தில், 41 கவுன்சிலர் பதவிகிடைத்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 3 வார்டுகளையும் தேமுதிக பிடித்துள்ளது.இதுதவிர 11 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளையும், பேரூராட்சிஉறுப்பினர் பதவியையும் தேமுதிக வென்றுள்ளது.
சில பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்குதேமுதிகவினரின் ஆதரவும் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில்உட்கட்சிப் பூசலால் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இப்படி பல வகைகளில் கவுன்சிலர் ஆதரவு பற்றாக்குறை இருப்பதால் தேமுதிககவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான் சில இடங்களில் தலைவர் பதவிக்குபோட்டியிடுபவர் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த 3 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை சிலர்கடத்திச் சென்று விட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு தேமுதிக கவுன்சிலர்முருகன். இவரை நேற்று பிற்பகல் ஒருவர் வந்து அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கிருந்த ஒரு காரில் காத்திருந்தவர்கள் முருகனை கட்டாயப்படுத்திகடத்திச் சென்று விட்டனர். இதேபோல 6வது வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன்,20வது வார்டு உறுப்பினர் சரஸ்வதியையும் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து3 பேர் கடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 10வது வார்டு தேமுதிக கவுன்சிலர்வரதராஜனையும் சிலர் கடத்தினர். ஆனால் தேமுதிக தொண்டர்கள் அந்த முயற்சியைமுறியடித்து வரதராஜனை காப்பாற்றினர்.
கடத்தப்பட்ட சேலம் மாவட்ட கவுன்சிலர்கள் குறித்து தலைவாசல் மற்றும் ஏத்தாப்பூர்காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் மீது நம்பிக்கைஇல்லாமல் மாவட்ட தேமுதிக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுகடத்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக 607 உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி முக்கியகட்சிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இக்கட்சிக்கு 16 மாநகராட்சி கவுன்சிலர்கள், 71நகராட்சி கவுன்சிலர்கள், 27 மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர்கள், 234 பேரூராட்சிகவுன்சிலர்கள், 244 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 15 மாவட்ட ஊராட்சிஉறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி ஆரம்பித்து பல காலமாகி விட்ட மதிமுகவுக்கு 527 இடங்களும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 349 இடங்களும், பாஜகவுக்க 228 இடங்களும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கு 196 இடங்களும் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், ஒன்றரைவருடமே ஆகும் தேமுதிகவுக்கு 607 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications