சண்டை கூடாது: திமுக கூட்டணி கூட்டறிக்கை
சென்னை:நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் எந்தவித பிரச்சினையும், குழப்பமும் இன்றி கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்கள் சுமூகமாக தேர்வு செய்யப்பட கூட்டணிக் கட்சியினர் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த நகராட்சிகள்,பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என்ற பட்டியலை திமுக அறிவித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான இடங்களில் திமுகவே பெரும்பான்மையாக உள்ளதால்,தங்களுக்கு ஒதுக்கப்படாத உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளதிமுக கவுன்சிலர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.
எனவே தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குஒதுக்கப்பட்ட இடங்களில் சுமூகமாக தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.
இந் நிலையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், முதல்வருமானகருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் ஆகியோர் கூட்டாகஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில்ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளுக்குகிடைத்திருக்கின்ற மகத்தான வெற்றியை தொடர்ந்து, மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி ஆகியவற்றுக்குநடைபெறவிருக்கும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின்சார்பில் போட்டியிடும் இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியின் சார்பில் அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிடும்வேட்பாளர்கள் வெற்றி பெற்றிட அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் ஒருமித்துப்பணியாற்றிட வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையிலே அந்த உள்ளாட்சி அமைப்பில்எத்தனை இடங்கள் உள்ளன என்பதை கணக்கில் கொள்ளாமல், போட்டியிடுகின்றவேட்பாளர்களை தங்களது கட்சியின் வேட்பாளர்கள் என கருதி ஒற்றுமைஉணர்வோடு வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிடவேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் போதிய நேரமில்லாத காரணத்தால், நமது கூட்டணிக்குள்ளேபேச்சுவார்த்தை நடத்தும்போது, ஆங்காங்கே சிறு சிறு மனக் கசப்புகளும்,நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கக் கூடிய நிலைமைகளும்ஏற்பட்டன.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்என்ற எண்ணத்தோடு மக்கள் நமக்கு அளித்துள்ள மிகப் பெரிய வெற்றியைநம்முடைய ஒற்றுமைக்கும், தமிழக அரசு கடந்த நான்கு மாதங்களில் நிறைவேற்றியசாதனைகளுக்கும் கிடைத்ததாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஒற்றுமையோடுபணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மாநகராட்சிகளுக்கும்,பிற நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மேயர், துணை மேயர்,தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications