பெரியாறு: கேரள அரசுடன் பேச்சு நடத்த முடிவு
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் முன்னிலையில் கேரள அரசுடன் பேச்சுநடத்துவது என முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டம் தொடங்கியது.
இதில் கருணாநிதி பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளவழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துஅடிப்படையில் எடுக்கும் முடிவை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம்.
கேரள முதல்வர் சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொள்ளலாமா அல்லதுஉச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை அணுகிமுறையிடலாமா என்பது குறித்து அனைத்துத் தரப்பினரின் கருத்தும் கோரப்படுகிறது என்றார்.
அதன் பின்னர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும்தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
அதன் பின்னர் கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில், மத்திய அரசின் முன்னிலையில்கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி, அதன் தீர்ப்பை நிறைவேற்றஉரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன்,காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, சுதர்சனம், பாமக சார்பில் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் சார்பில் வரதராஜன், இந்தியகம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன், திக சார்பில் கி.வீரமணி, மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன், தேமுதிகசார்பில் விஜயகாந்த்,
பாஜக சார்பில் இல.கணேசன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்ளிட்ட 23 அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளும்கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications