ஜெ.வை விமர்சிக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை
சென்னை:எம்.ஜி.ஆரின். மறைவுக்குப் பின்னர் அதிமுகவைக் கட்டிக் காத்து வரும் ஜெயலலிதாவை விமர்சிக்க, நேற்று கட்சிஆரம்பித்த விஜயகாந்த்துக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று அதிமுக தலைமை நிலைய செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்தை குடிகாரன் என்று ஜெயலலிதா சொல்லப் போக, நீங்கள் தான் அருகே அமர்ந்து ஊற்றிக்கொடுத்தீர்களா என்று பதிலுக்கு விஜயகாந்த்தும் நச்சென்று வார, இரு கட்சிகளுக்கும் இடையே போர்மூண்டுள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்த் வெளியிட்ட காட்டமான அறிக்கைக்குப் பதில் அளித்து செங்கோட்டையன் இன்றுஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான்சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.
கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்என்று இருந்ததை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தவர் ஜெயலலிதா.
அதிமுக தலைக்ை கழக அலுவலகம், அண்ணா சாலையில் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலைகளை திறந்துவைத்தவர் ஜெயலலிதா.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவ சென்னையிலிருந்து சிலையை டெல்லிக்குஅனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. விரைவில் அந்த சிலை திறக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும்நூற்றுக்கணக்கான எம்.ஜி.ஆர். சிலைகளை நிறுவித் திறந்து வைத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். புகழை இருட்டடிப்பு செய்து வரும் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் சமாதியை சாதாரண குடை போலவடிவமைத்து கொச்சைப்படுத்தினார். இதை தனது ஆட்சிக்காலத்தில் சமாதியை வனப்பும், வசீகரமுமாகமாற்றியவர் ஜெயலலிதா.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர், போக்குவரத்துக் கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்தவர்ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி,மருத்துவ வசதிகளை அளித்து வருபவர் ஜெயலலிதா.
இதயம் காப்போம் என்ற திட்டத்தைத் தொடங்கி பல உயிர்களைக் காப்பாற்றி எம்.ஜி.ஆருக்கு பெருமைசேர்த்தவர் ஜெயலலிதா.
அதிமுகவை தனது அரசிய சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை.
ஜெயலலிதாவால் மட்டுமே கட்சியை திறம்பட வழி நடத்திச் செல்ல முடியும். அதற்கான ஆற்றலும், அறிவும்,திறமையும் அவருக்கு மட்டுமே உள்ளதை அறிந்து, எம்.ஜி.ஆர்தான் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்துவந்தார்.
1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, இங்கே நடந்த தேர்தலில் அதிமுகவேட்பாளர்களுக்காக 500க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து, அதிமுக ஆட்சிஉருவாக, எம்.ஜி.ஆரின் தள கர்த்தாவாக ஜெயலலிதா செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் நீங்கள்தான் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று மறைந்தநெடுஞ்செழியன் உள்ளிட்ட பெரும்பான்மையான பிரமுகர்களும், மாவட்ட செயலாளர்களும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை மறுத்தவர் ஜெயலலிதா. இருப்பினும் அனைவரும் கண்ணீர் மல்க மீண்டும் கேட்டுக்கொண்டதால்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து, இழந்த இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெற்று,சோதனைகளையும், அவமானஙகளையும் தாங்கிக் கொண்டு மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின்போது எங்கிருந்தார்?அதிமுகவின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கருணாநிதி ஜெயலலிதாவை பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் போட்டார். அதில் 12 வழக்குகளில் ஜெயலலிதாநிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஜெயலலிதாவைக் குறை சொல்ல விஜயகாந்த்துக்குஎந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications