பவார் கட்சியில் இணைகிறார் திண்டிவனம்
சென்னை:அதிமுகவை நம்பி காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கி வீணாய் போன திண்டிவனம்ராமமூர்த்தி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்புஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அவரைகட்சியிலிருந்து நீக்கி மேலிடம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழக ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.ஆனால், அதிமுக கூட்டணியில் இணைந்த ராமமூர்த்திக்கு ஒரு சீட் கூட தரவில்லை ஜெயலலிதா. இதனால்ராமமூர்த்தி மட்டுமல்லாது அவரோடு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்களும் அதிர்ச்சியில்ஆழ்ந்தனர்.
இதனால் தனித்து சில இடங்களில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்தது ராமமூர்த்தியின்கட்சி. தேர்தலுக்குப் பின்னர் இக்கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. ராமமூர்த்தி அமைதியாக இருந்துவருகிறார்.
இந் நிலையில் தனது கட்சியை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவுசெய்துள்ளார். இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தமிழக ஜனநாய காங்கிரஸை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சரத் பவார் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வருடன் பேச்சுவார்த்தைநடத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தஞ்சையில் நடைபெறும் பிரமாண்ட (???) மாநாட்டில் இணைப்பு விழாநடைபெறும்.
என்னுடன், முன்னாள் எம்.பிக்கள் சிங்காரவடிவேலு, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் தேசியவாத காங்கிரஸ்கட்சியில் இணையவுள்ளனர் என்றார் ராமமூர்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications