அதிமுக வழியாக திமுகவுக்கு வந்த சுயேச்சை
மதுரை:சுயேச்சையாகத் தேர்வான கவுன்சிலர் ஒருவர் அதிமுகவில் இணைந்துவிட்டு மறு நாளே திமுகவில் சேர்ந்து ஓட்டுபோட்ட மதுரை மக்களை கலக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை கவுன்சிலர்களுக்கு பேரதிர்ஷ்டம் அடித்துள்ளது. தலைவர்பதவியைப் பிடிக்க ஆள் தேவைப்படும் இடங்களில் எல்லாம் சுயேச்சை வேட்பாளர்களுக்கும், பிற கட்சிவேட்பாளர்களுக்கும் ஆளுங்கட்சி தரப்பில் பணத்தாசை காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதை நிரூபிப்பது போல ஏகப்பட்ட சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதில் மதுரைமாநகராட்சியின் 50வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் செந்தில்குமார் படு வித்தியாசமானவராக இருக்கிறார்.
சுயேச்சையான தேர்வான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஜெயலலிதா நன்றியும், வாழ்த்தும் கூறினார்.
சென்னையிலிருந்து மதுரை திரும்பிய செந்தில்குமார், திடீரென அழகிரியை சந்தித்து மாலை அணிவித்து,பொன்னாடைபோர்த்தி காலில் விழுந்தார்.
அத்தோடு திமுகவில் இணைந்து விட்டார். தன்னோடு மேலும் 25 அதிமுகவினரையும் கூட்டிக் கொண்டுதிமுகவில் இணைந்துள்ளார்.
இவரது இந்த பலே தாவல் 50வது வட்டத்தில் மட்டுமல்லாது மதுரை மக்கள் மத்தியிலும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, 30வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சரஸ்வதியும், திமுகவில் இணைந்துவிட்டார். இந்த தாவல்கள்மூலம் மாநகராட்சியில் திமுகவின் பலம் 38 ஆக எகிறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications