ஜெ.வால் அதிமுகவுக்கு வந்த கஷ்டம்
சென்னை:விஜயகாந்த்தை குடிகாரன் என ஜெயலலிதா திட்டியதால், தேமுதிக தயவால் சில உள்ளாட்சி அமைப்புகளின்தலைவர் பதவியை தட்டி விடலாம் என காத்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகவும் குறைவான இடங்களையே வென்றுள்ளது. பெரும்பாலான தலைவர்பதவிகளை திமுக கூட்டணிக் கட்சியினரே அள்ளி விடும் நிலையில் சில இடங்களில் தேமுதிக, சுயேச்சைகள்உள்ளிட்டோரின் ஆதரவால் தலைவர் பதவியைப் பிடிக்கக் கூடிய நிலையில் அதிமுக உள்ளது.
தேமுதிகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 415 கவுன்சிலர்கள் கிடைத்துள்ளனர். இவற்றில் நகராட்சிகளில் 100பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 107 பேரும், பேரூராட்சியில் 13 பேரும், ஊராட்சி ஒன்றியத்தில் 179பேரும் உள்ளனர்.
பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட தேமுதிக அதிக இடங்களில் வென்றுள்ளது பழைய செய்தி. சிலதலைவர் பொறுப்புகளை தேமுதிக பிடிக்கும் நிலையும் காணப்படுகிறது. அதேசமயம், பெரும்பாலானஇடங்களில் இவர்களின் ஆதரவால் பிறர் தலைவர் பதவிகளைப் பிடிக்கக் கூடிய நிலை உள்ளது.
அப்படிப்பட்ட இடங்களில் தேமுதிகவினரின் ஆதரவைப் பெற அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால்இப்போது அதில் மண் விழுந்துள்ளது. இதற்கு காரணம் விஜயகாந்த்தை குடிகாரன் என விமர்சித்து ஜெயலலிதாவிட்ட காட்டமான அறிக்கைதான்.
திமுகவை தலைவர் பதவிக்கு வர விடாமல் தடுக்க தங்களுக்கு தேமுதிகவினர் ஆதரவு தருவார்கள் என்றுஇழுபறியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிக கவுன்சிலர்களை வைத்திருக்கும் அதிமுகவினர்எதிர்பார்த்தனர். அதிமுகவுக்கு ஆதரவு தர தேமுதிகவினரும் தயாராகவே இருந்தனர்.
குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கூறப்படும் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் அதிமுக 11இடங்களிலும், மதிமுக 1 இடத்திலும் வென்றுள்ளன. தேமுதிக 2 கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது. தேமுதிகவின்ஆதரவு இருந்தால்தான் இந்த நகராட்சியை அதிமுக கைவசப்படுத்த முடியும்.
இப்படி தேமுதிக ஆதரவிருந்தால் பிடித்து விடலாம் என்ற நிலையில் பல நகராட்சிகள், பேரூராட்சிகள்உள்ளிட்டவை உள்ளன.
ஆனால் ஜெயலலிதாவின் அறிக்கையால் தேமுதிகவினர் மத்தியில் கடும் காட்டம் எழுந்துள்ளது. அதிமுகவுக்குஆதரவு தரும் முடிவை தேமுதிக கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இதனால் தேமுதிக ஆதரவுடன் கணிசமான தலைவர், துணைத் தலைவர் பதவிகலை கைப்பற்றி விடலாம் எனகாத்திருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் நம்பிக்கையை விட்டு விடாமல், நமது பொது எதிரி திமுகதான். எனவே திமுகவை தலைவர்பதவிக்கு வர விட்டு விடக் கூடாது. அப்படி நடந்தால் நமது கதி அதோ கதிதான் என்று தேமுதிகவினரிடம் கூறிஅவர்களை சமாதானப்படுத்தி தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications