பதவியேற்ற பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலைவர்கள்
மதுரை:சர்ச்சைக்குரிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித்பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதவியேற்றுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம்கொட்டக்காச்சியேந்தல் ஆகிய கிராமங்களில் பல காலமாக தலைவர்கள் இல்லாதநிலை நிலவி வந்தது.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி,நாட்டாமங்கலம் ஆகிய கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு தலைவர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாப்பாபட்டி தலைவராக ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட பெரியகருப்பணும்,நாட்டாமங்கலத்தில் ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட கணேசனும், கீரிப்பட்டியில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பால்ச்சாமியும் வெற்றிபெற்றனர்.
இவர்களில் பால்ச்சாமி மட்டும் போட்டியின்றி வெற்றி பெற்றார். 3 பேரும்பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பால்ச்சாமி கீரிப்பட்டியில் உள்ளபஞ்சாயத்து அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதவியேற்றார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன், எஸ்.பி. அன்புஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாப்பாபட்டியில் ஊர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித் தலைவர் முன்னிலையில் பதவியேற்பு விழா நடந்தது. கிராமப் பெண்கள்குலவையிட தலைவர் பெரியகருப்பன் பதவியேற்றார்.
இதேபோல நாட்டாமங்கலத்தில் நடந்த விழாவில் புதிய தலைவர் கணேசனுக்குதேர்தல் அதிகாரி பாலகுருசாமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1ஓட்டில் வென்றவர் போலீஸ் துணையுடன் பதவியேற்பு:
சென்னை அருகே காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒருஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கு கீரப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். ராஜேந்திரனை பதவி ஏற்க விட மாட்டோம் எனகூறியிருந்தனர்.
நேற்று பதவியேற்பு நிகழ்ச்சியின்போது 300க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ராஜேந்திரன்தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரினார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜேந்திரன் பஞ்சாயத்து அலுவலகம் வந்தார். ஆனால் ராஜேந்திரனை ஊர் மக்கள் முற்றுகையிட்டு அவரதுகையில் இருந்த பதவியேற்பு பத்திரத்தை வாங்கி கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் ஊர் மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு வளையத்தின் கீழ்ராஜேந்திரன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு உள்ளே சென்று பதவியேற்றுக் கொண்டார்.
கருப்புக் கொடி ஏற்றிய கிராமம்:
பெரம்பலூர் மாவட்டம் பேரளி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பதற்கு பனங்கூர், மருவத்தூர் கிராம மக்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.
பேரளி பஞ்சாயத்துக்குக் கூடுதல் வார்டுகள் ஒதுக்க வேண்டும், மருவத்தூர், பனங்கூரை தனி ஊராட்சிகளாக மாற்ற வேண்டும் என்று கோரி நேற்றையபதவியேற்பு விழாவைக் கண்டித்து தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications