பெண் கவுன்சிலர் கடத்தலா?-பள்ளிப்பட்டில் ரகளை
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் குழு பாமக கவுன்சிலர் நளினியை போலீஸார் கடத்திச்செல்வதாக ஏற்பட்ட பரபரப்பால் அங்கு பெரும் ரகளை நடந்தது. போலீஸார் மீது பொதுமக்கள் கல்வீசித்தாக்கியதில் டி.எஸ்.பி. உள்ளிட்ட பல போலீஸார் காயமடைந்தனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்தவர் காங்கிரஸைச் சேர்ந்த உமாபதி. இந்த முறை இப்பதவிபெண்களுக்கா ஒதுக்கப்பட்டதால் 1வது வார்டில் தனது மனைவி ஸ்ரீவாணியை போட்டியிட வைத்தார். ஆனால்இந்த வார்டு திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் போட்டியிலிருந்து விலகாமல் ஸ்ரீவாணி களத்தில் நின்றார்.தேர்தலிலும் வெற்றியும் பெற்றார்.
இதையடுத்து தலைவர் பதவியையும் பிடிக்க முடிவு செய்தார் உமாபதி. இதற்காக 6வது வார்டில் வெற்றி பெற்றபாமக கவுன்சிலர் நளினியிடம் ஆதரவு கோரியிருந்தார். அவரும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
இந் நிலையில் கைக்குழந்தையுடன் தனது மனைவியை உமாபதியின் ஆட்கள் கடத்திச் சென்று விட்டதாகநளினியின் கணவர் ஏழுமலை போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நிளினியை போலீஸார் தேடிவந்தனர்.
இந் நிலையில் நேற்று கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக நளினியும்வந்தார். பதவியேற்று முடித்ததும், வீட்டுக்கு வருமாறு ஏழுமலை நளினியைக் கூப்பிட்டார். அதேபோலஉமாபதியின் ஆதரவாளர்களும் தங்களுடன் வருமாறு அழைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் பெரும் தள்ளுள்ளில் ஈடுபட்டனர். இதையடுத்துபோலீஸார் தலையிட்டனர். அப்போது நளினி, நான் யாருடனும் செல்லவில்லை. எனது சித்தப்பா வீட்டுக்குச்செல்கிறேன் என்று கூறி அவருடன் காரில் ஏறிக் கிளம்பினார்.
பிரச்சினையாகி விடக் கூடாது என்பதற்காக போலீஸாரும் ஜீப்பில் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். ஆனால்இதைப் பார்த்த உமாபதி கோஷ்டியினர், போலீஸார் நளினியை கடத்திச் செல்வதாக கூறி போலீஸார் மீதுகல்வீச்சில் இறங்கினர். மேலும் சாலை மறியலிலும் இறங்கினர்.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைசமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் போலீஸார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
இதில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் போலீஸார் விஜயரங்கன்,மோகனம், ஆறுகம், செங்கல்வராயன் ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பள்ளிப்பட்டு அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உமாபதி கோஷ்டியைச் சேர்ந்த 35 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பள்ளிப்பட்டு -சோளிங்கர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்புஏற்பட்டது.












Click it and Unblock the Notifications