விடுதலை செய்யக் கோரி நளினி மனு
சென்னை:ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிதன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 4பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நளினியின் தூக்குத் தண்டனைமட்டும் பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்ற 3 பேரும் தாக்கல்செய்துள்ள கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளன.
நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,கடந்த 15.9.2006ம் ஆண்டுக்குள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நான்அனுபவித்துள்ளேன். ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யகடந்த 14.9.2006 அன்றுஉத்தரவிட்டது.
இதையடுத்து 15.9.2006 அன்று 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். அப்போது நானும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசுபிறப்பித்த உத்தரவில், ஆயுள் தண்டனைக் கைதிகளை இரு பிரிவுகளாகபிரித்துள்ளனர். மத்திய அரசின் சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரணை நடத்தி அதன்மூலம் தண்டனை பெற்றவர்களைதனியாக பிரித்துள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்தைகுறைத்து விடுதலை செய்ய முடியாதுஎன்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆயுள் தண்டனைகைதிகளிடையே பாரபட்சம் காட்டும் வகையில்உள்ளது.
நான் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். சிறைக்குள்ளேயே இருந்துஎம்.சி.ஏ. பட்டப்படிப்பைமுடித்துள்ளேன். எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். எனவேஅரசு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் என்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார் நளினி.
இந்த மனு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்,இதுகுறித்து 3 வாரத்திற்கள் பதில் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications