ரவுடியிடம் நலம் விசாரித்த போலீஸார் சஸ்பெண்ட்!
திருச்சி:திருச்சியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடியை பார்த்துநலம் விசாரிக்க சென்ற 4 போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கடல் சேகர் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நைனா முகம்மது என்றரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட முகம்மதுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவந்தனர். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் முகம்மதுவை சந்தித்து நலம்விசாரிப்பதற்காக ஆயுதப் படை காவல்துறையில் பணியாற்றும் சிவக்குமார், ஆனந்த்,ஸ்டீபன், அசோகன் ஆகிய நான்கு காவலர்களும் வந்துள்ளனர்.
ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புக்கு நின்றிருந்தபோலீஸார் கூறியுள்ளனர்.
இதையடுத்து நான்கு காவலர்களுக்கும், பாதுகாப்பு காவலர்களுக்கும் இடையேவாக்குவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பிலும்ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நான்கு ஆயுதப்படை போலீஸார் மீதும் மாநகர காவல்துறைஆணையர் சுனில் குமார் சிங்கிடம் புகார் கொடுக்கப்பட்டது. ரவுடியைப் பார்த்த நலம்விசாரிக்க சென்றதற்காகவும், பாதுகாப்புப் பணியில் இருந்தபோலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காகவும் 4 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications