3 மாதங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையும் என்றுதலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு இன்று வந்த கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் இந்தப் பணி முடிவடையும். தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் இந்தப் பணிமுடிக்கப்பட்டு விடும் என்றார் கோபாலசாமி.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார் புகார்குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஏற்கனவேவிரிவான விளக்கம் அளித்துள்ளார் என்றார் கோபாலசாமி.












Click it and Unblock the Notifications