தொடரும் திமுக அத்துமீறல்கள்: ஜெ.கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தலைவர், துணைத் தலைவர் தேர்தலிலும் திமுகவினர் வன்முறையைக்கட்டவிழ்த்து விட்டனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அராஜகத்தையும், வன்முறையையும்கட்டவிழ்த்து விட்டு, மக்கள் தேர்தலில் பங்கேற்க முடியாத அளவுக்கு ஒரு தேர்தலை திமுக ஆட்சி நடத்தியது.

சென்னை மக்கள் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த வன்முறைகள் குறித்து பத்திரிக்கைகள்புகைப்படத்துடன் செய்திகள் வெளியிட்டபோதும் கூட தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து வருகிறார்கள்.

பண்ருட்டி நகராட்சியில் அதிமுகவுக்கு 19 பேரின் ஆதரவு இருந்தது.இருந்தும், திமுகவைச் சேர்ந்த பச்சையப்பன், கதிரவன் ஆகியோர் தலைவர் தேர்தலின்போது கலாட்டா செய்துதேர்தல் அதிகாரியின் கையைப் பிடித்து முறுக்கியுள்ளனர்.

அமைச்சர்கள் பொன்டி, பன்னீர் செல்வம் ஆகியோரது உத்தரவின் பேரில் திமுகவினர் வன்முறையில்ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கூறியும் பயன்இல்லை.

சேலம மாவட்டம் ஏத்தாப்பூர், பனைமரத்துப்பட்டி, அயோத்திப்பட்டனம் ஆகிய இடங்களில் தேர்தல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிக 14, திமுக 9 என்றுஆதரவு இருந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி உள்ளே நுழைந்து வாக்குச்சீட்டுக்களை கிழித்து தகராறு செய்துள்ளார். இதனால் அங்கு மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தஇடங்கள் எல்லாம் அதிமுக வெற்றி பெற வேண்டிய இடங்கள்.

சிதம்பரம் நகராட்சியில் தேர்தல் அதிகாரியை மிரட்டி திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்ப்டுள்ளது. இதனால்துணைத் தலைவர் தேர்தலை அதிமுக புறக்கணித்தது.

மக்கள் மன்றம் அளித்த தீர்ப்பை கொச்சைப்படுத்தம் வகையில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேசுவதுஜீரணிக்க கூடியதல்ல. இதுபோன்ற முறைககேடுகள் தமிழகம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு உள்ளன.பதவி மீதும், பணம் மீதும் ஆசையில்லை என்று கூறும் கருணாநிதி, முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்திமக்கள் தீர்ப்பை ஏன் மாற்றச் செய்ய வேண்டும்?

தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. புத்தர் வேடம் புனையும் கருணாநிதியின் வேடம் விரைவில் கலையும். அவரைமட்டுமல்லாது, அவரது சந்ததியினரையும் மக்கள் ஒதுக்கி வைக்கும் காலம் வரும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+