தேவர் குருபூஜை: நினைவிடத்தில் மரியாதை
சென்னை:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகள்மற்றும் பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்துமரியாதை செய்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு இன்று குருபூஜை தினம். இதையடுத்து சென்னை நந்தனத்தில் உள்ளதேவர் சிலைக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி,பூங்கோதை ஆலடி அருணா, மதிவாணன், சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியம் ஆகியோர் மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட காங்கிரஸாரும் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழரசி, திண்டுக்கல் ஐ. பெரியசாமி, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம்,மதுரை மாநகர மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமம் குருபூஜையையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறுகட்சிகளின் தலைவர்களும், சமுதாயத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுதவிர தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான முக்குலத்தோர் சமுதாயத்தினரும் பசும்பொன்கிராமத்திற்கு வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
ஏராளமான பேர் தேவர் நினைவிடத்திற்கு அருகே மொட்டை போட்டுக் கொள்கின்றனர். பொங்கல் வைத்துபூஜையும் செய்தவண்ணம் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அதிமுகஎம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி தலைமையிலான பாமகவினரும், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் இல.கணேசன்,பார்வர்ட் பிளாக் தலைவர் சந்தானம், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோரும்மாலை அணிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications