மனைவி சித்ரவதை: புதுவை அமைச்சர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர்அங்காளன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அங்காளனின் 2வது மனைவி கவிப்பிரியா. இவர் தன்னை அமைச்சர் அங்காளன் அடித்துக்கொடுமைப்படுத்துவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக பெண்கள்அமைப்பினர் களம் இறங்கினர். அதேபோல அமைச்சருக்கு ஆதரவாகவும் சில பெண்கள் அமைப்பு களம்இறங்கியதால் பிரச்சினை சூடு பிடித்தது.

இந்த நிலையில் திருக்கனூர் காவல் நிலையத்தில் கவிப்பிரியா புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தனது கணவர்அங்காளன் தன்னை துன்புறுத்துவதாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து மனைவியைக் கொடுமைப்படுத்தியதுதொடர்பாக அங்காளன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஜி. கிஷன்குமார் கூறுகையில், இது குடும்பப் பிரச்சினை என்பதால் இரு தரப்பிலும் சமாதானம்செய்ய முயன்றோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவேதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார்.

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் அங்காளன் மீது வழக்குதொடராதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

இந்த சட்டம் தொடர்பாக ஒரு அலுவலரை அரசு நியமிக்க வேண்டும். அவர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு நீதிமன்றம் சொன்னால்தான் அந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றார் ஐ.ஜி. கிஷன் குமார்.

அமைச்சர் அங்காளன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கருத்துகேட்டபோது, வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்துவார்கள். அமைச்சர் அங்காளன் இதுவரைராஜினாமா செய்யவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+