டோப்: அக்தார், ஆசிபுக்கு 2 ஆண்டு தடை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் சோயிப் அக்தாருக்கு 2 ஆண்டு தடையும், முகம்மது ஆசிப்புக்கு 1 ஆண்டுதடையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.Akhtar

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சமீபத்தில் ஊக்க மருந்து சோதனைநடத்தப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவந்திருந்த சமயத்தில் சோதனை முடிவுகள் வெளியாகின.

அதில் அக்தாரும், ஆசிப்பும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதுதெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இருவரையும் உடனடியாக நாடு திரும்புமாறுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அவர்கள் மீது விசாரணை நடத்ததீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டது.

Asifவிசாரணையை முடித்து விட்ட தீர்ப்பாயம் அதன் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தீர்ப்பாயத் தலைவர் ஷாஹித் ஹமீது செய்தியாளர்களிடம் பேசுகையில்,அக்தாரும், ஆசிப்பும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொள்ளவில்லைஎன்பதை சரிவர நிரூபிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்திருப்தி தரவில்லை.

இருவரிடம் நேரடியாக விளக்கம் கேட்கப்பட்டது. மருத்துவ நிபுணர்களுடனும்ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் இறுதியில் இருவரும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே சோயிப் அக்தாருக்கு 2 ஆண்டு தடையும், ஆசிப்புக்கு 1 ஆண்டு தடையும்விதிக்க முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த தடை அமலுக்குவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் எந்தவிதப் போட்டிகளிலும்,சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இரு வீரர்களும் கலந்து கொள்ளமுடியாது என்று ஷாஹித் ஹமீது கூறினார்.

இந்தத் தடை உத்தரவு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்தாரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைகிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.

மேலும், இந்தத் தடை காரணமாக இரு வீரர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டியிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான்கிரிக்கெட் அணிக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+