ஜனனி பணம் கள்ள நோட்டு அல்ல!
சென்னை:மதுரை இளம் பெண் ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் கள்ள நோட்டு அல்ல என்று நாசிக்கைச் சேர்ந்தஅரசு ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் அச்சகம் தெரிவித்துள்ளதால் ஜனனி மீதான வழக்கு பெரும் திருப்பத்தைசந்தித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனி மீது கடந்த அதிமுக ஆட்சியில், 2003ம் ஆண்டு கஞ்சாவைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலிருந்து அவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் அடுத்த ஓரிரு நாட்களிலேயே ஜனனி மீது கள்ள நோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா வழக்கில் ஜனனி கைது செய்யப்பட்டபோது ரூ.1 கோடியே 30 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்செய்யப்பட்டது. இந்தப் பணம் மதுரையில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.
கஞ்சா வழக்கிலிருந்து ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை விடுதலை செய்த மதுரைபோதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம், ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து வங்கியிலிருந்து அந்தப் பணத்தை எடுத்த அதிகாரிகள் பணத்தை எண்ணிப் பார்த்தபோதுகிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் புது பரபரப்புஏற்பட்டது.
இதையடுத்து ஜனனி உள்ளிட்ட 4 பேர் மீது கள்ள நோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்அனைவருக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருந்தபோதே, ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய்நோட்டுக்களின் எண்களை நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்திற்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு கடிதம்அனுப்பியது. இதற்கு நாசிக் அச்சகம் அனுப்பிய பதிலில், அந்த எண்கள் கொண்ட நோட்டுக்கள் இன்னும்வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்தே ஜனனி உள்ளிட்டோர் மீது கள்ள நோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர்சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நாசிக் அச்சகத்திடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி தரப்பில்புதிதாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்திற்கு நாசிக் அச்சகம் அளித்துள்ள பதிலில், சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பியிருந்த எண்கள்கொண்ட ரூபாய் நோட்டுக்கள் கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி புழக்கத்திற்கு விடப்பட்டதாக நாசிக்அச்சகம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறைக்கு தாங்கள் ஏற்கனவே அனுப்பிய அறிக்கை தவறானது என்றும், அதற்காக வருத்தம்தெரிவிப்பதாகவும் நாசிக் அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி ஜனனியிடம் மதுரை போலீஸார்ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ்வங்கி வெளியிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாசிக் அச்சகம் கொடுத்துள்ள புதிய அறிக்கையை இணைத்து மதுரை போதைப் பொருள் தடுப்புநீதிமன்றத்தில், சிபிசிஐடி அதிகாரிகள் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கின் எதிர்காலம்குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டது கள்ள நோட்டு அல்ல என்று நாசிக் அரசு அச்சகம் தெளிவுபடுத்தி விட்டதால் ஜனனிஉள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications