மனைவி புகார்-ஜாமீன் கோரும் புதுவை அமைச்சர்
புதுச்சேரி:மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு தொடர்ந்திருப்பதால், புதுவை சமூக நலத்துறை அமைச்சர்அங்காளன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில், சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் அங்காளன். இவரது 2வதுமனைவி கவிப்பிரியா. இவர் சமீபத்தில், புதுவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், தினசரி குடித்து விட்டு வந்து தன்னை அங்காளன் அடிக்கிறார். தலையணையால் முகத்தை அழுத்திகொலை செய்ய முயற்சித்தார். சித்திரவதை செய்கிறார் என்று தனது புகாரில் கவிப்பிரியா கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படக் கூடும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று புதுவை தலைமை செஷன்ஸ் நீதிமன்றத்தில்அங்காளன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சின்னப்பாண்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகம், 6ம் தேதி பதில் மனு தாக்கல் செய்வதாகதெரிவித்தார். இதையடுத்து 6ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, இவ்வழக்கு திருக்கனூர் காவல் நிலையத்திலிருந்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்திற்குமாற்றப்பட்டுள்ளது. மூத்த எஸ்.பி. சாயா சர்மா, கவிப்பிரியாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அங்காளனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவரைஉடனடியாக சமூக நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்கோரியுள்ளது.
அங்காளன் மீதான புகார் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சுதாகர் ரெட்டியும் விசாரணைநடத்தியுள்ளார். அவர் கட்சி மேலிடத்தில் அறிக்கை கொடுத்த பின்னர் அங்காளன் மீது காங்கிரஸ் மேலிடம்நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
பிரச்சினை வலுத்து வருவதால் விரைவில் அங்காளன் அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, கவிப்பிரியாவிடமிருந்து விவாகரத்து கோரி புதுவை குடும்ப நல நீதிமன்றத்தில் அங்காளன் மனுசெய்துள்ளார். இந்த வழக்கு வருகிற 17ம் தேதி விசாரைணக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications