தப்பியது தமிழக 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம்
டெல்லி:தமிழக அரசு நிறைவேற்றிய 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லுமா, செல்லாதா என்பது பற்றி ஆய்வு செய்யமாட்டோம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையின் இச்சட்டம் சேர்க்கப்பட்டது. இந்த அட்டவனையில் சேர்க்கப்படும்சட்டத்தையும் எந்த நீதிமன்றமும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. எனவே இத்தகைய அரசியல் சட்ட பாதுகாப்புகிடைப்பதற்காக, 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
ஆனால் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை இச்சட்டம்மீறிவிட்டதாகவும், வசதி படைத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கிறது என்றும், எனவே இச்சட்டம் செல்லாதுஎன அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
9வது அட்டவனையின் சேர்க்கப்படும் சட்டங்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறும்வகையில் இருந்தாலும், அவற்றை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாதா? என்று உச்ச நீதிமன்றத்திற்க்கு சந்தேகம்எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்ய தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சட்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசு சட்டம் செல்லுமாஎன்று ஆய்வு செய்வீர்களா? என்று நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் எந்த தனிப்பட்ட சட்டத்தை பற்றியும் ஆய்வு செய்ய மாட்டோம் என்று உறுதிஅளித்தனர்.
இதையடுத்து ராம் ஜெத்தமலானி வாதாடுகையில்,
69% இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறிவிட்டதா என்பது இந்த நீதிமன்றத்தால்தீர்மனிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அது அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று தமிழக அரசுகூறுகிறது.
நலிந்த பிரிவினரின் கல்வி, சமூக , பொருளாதார வாழ்க்கை தரத்தை உயர்ந்துவதன் மூலம் அவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, இச்சட்டம் அடிப்படை கட்டமைப்பை மீறுவதற்கு பதிலாக, அடிப்படைகட்டமைப்பை பலப்படுத்துகிறது.
அடிப்படை கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்யும் முன்பு, பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றும்போது, அதுஅரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறாது என்று உறுதியாக தெரிந்த பின்னரே நிறைவேற்றும்என்பதையும், நாடாளும்ன்றம் தனது அதிகார எல்லையை உணர்ந்தே இருக்கிறது என்பதையும் மனதில் கொண்டுஇந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டசபைகள் எடுத்த முடிவுகளை உயர்வாக மதிக்க வேண்டும். இது போன்ற முடிவுகளைஎடுக்க அவற்றுக்கு அதிகாரம் இல்லை என்றால் மட்டுமே, அந்த முடிவுகளை நீதிமன்றம் தலையிட்டு மாற்றவேண்டும்.
மக்களாலும், அவர்களின் பிரதிநிதிகளாலும் அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்தின்அடிப்படை கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட சட்டம் மீறுகிறதா என்பன போன்ற சிக்கலான விஷயங்களைநீதிமன்றம் கூடுமானவரை ஆய்வு செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் அந்தி ஆர்ஜூனாவும் வாதாடினார். அவர் கூறுகையில்,
ஒரு சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் போது, மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டம் தவறான பயன்படுத்தப்படும் என்று கருதக்கூடாது. இந்தசட்டங்கள் எதுவும், குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை என அவர் கூறினார்.
எம்பிக்கள் குழு ஆய்வு:
முன்னதாக உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தவதற்கான திட்டத்தை தயாரிக்க வீரப்பமொய்லி தலைமையில் மத்திய அரசு குழு அமைக்கப்பட்டது. இறுதி அறிக்கைய தாக்கல் செய்த இந்த குழு, வசதிபடைத்தோருக்கு இடஒதுக்கீடு தருவதா வேண்டாமா என்பதை அரசின் முடிவுக்கே விட்டு விட்டது.
இந் நிலையில் இதர பிற்பட்ட வகுப்பினரின் (ஓ.பி.சி.) வசதி படைத்தோரை இட ஒதுக்கீடு வரம்பிலிருந்து விலக்கிவைப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மனித வள மேம்பாட்டுக்கானநாடாளுமன்ற எம்பிக்கள் குழு ஆலோசனை நடத்தியது.
மேலும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதுதொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
பிற்படுத்தப்பட்டவர்களின் வசதி படைத்தோர் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட எல்லா விவரங்களையும்அளிக்கும்படி வீரப்ப மொய்லி குழுவிடம் இந்த நாடாளுமன்றக் குழு கேட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் 31 பேர் உள்ளனர். இந்த குழு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசியகமிஷனின் தலைவர் ரத்னவேல் பாண்டியன், தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் முகம்மது ஹமீதுஆகியோரின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மசோதாநாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா பாராளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இட ஒதுக்கீடுதொடர்பான தனது அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும்என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications