யாழ். சாலையை திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்த உடனடியாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும்நெடுஞ்சாலையை இலங்கை அரசு திறந்து விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஜெனீவாவில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்புக்குமாறாக தோல்வியில் முடிந்துள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கியச் சாலையை திறக்க முடியாது எனஇலங்கை அரசு பிடிவாதம் பிடித்துள்ளதால் தான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கை அரசின்மூர்க்கத்தனமான இந்த பிடிவாதம் கண்டனத்துக்குரியது.
ஈழத் தமிழர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதுதான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற எண்ணத்தில் இலங்கைஅரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முப்படைகளையும் கொண்டு தமிழர்களை மூர்க்கத்தனமாக கொன்றுகுவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
மறுபுறம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் 6 லட்சம் ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள்,மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல விடாமல்தடுத்து வருகிறது.
இதனால் யாழ். தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள அரசின் இந்தமனிதாபிமானமற்றச் செயல், உலகில் வேறு எங்கும் கேட்டறியாத கொடுமையாகும். நம்முடைய கண் முன்னேநடக்கும் இந்தக் கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூாடது.
ராணுவம் மூடி வைத்துள்ள யாழ் செல்லும் நெடுஞ்சாலையை திறந்து விடும்படி சிங்கள அரசை இந்தியாவலியுறுத்த வேண்டும். அதற்குக் கட்டுப்பட இலங்கை அரசு மறுத்தால், ஈழத் தமிழர்களை பட்டினிச் சாவிலிருந்துகாப்பாற்ற அத்தியாவசியப் பொருட்களையும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் இந்தியா அனுப்பிவைக்க வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் இந்த நடவடிக்கையில் இந்தியா ஈடுபட வேண்டும். இதன் மூலம் பட்டினிச்சாவிலிருந்து 6 லட்சம் தமிழர்களைக் காக்க வேண்டும்.
உலகில் எங்கெங்கோ நடந்த பட்டினிச் சாவுகளுக்கெல்லாம் இந்தியா குரல் கொடுத்துள்ளது. கூப்பிடும் தூரத்தில்உள்ள இலங்கையில், நடந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.
இது தமிழகத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தமிழர்களின்வேண்டுகோளும், விருப்பம் ஆகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications