பாக். சிறை-மீண்ட தமிழக மீனவர்களுக்கு உதவி
சென்னை:பாகிஸ்தான் சிறையில் அடைபட்டு விடுதலையாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுக்கு தலா ரூ. 25,000நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தூத்தூர், பூத்துறை, குறும்பனை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தஇனிகோ, கிறிஸ்துராஜன், கோஸ்மன், ஆரோக்கியதாஸ், இன்னொரு இனிகோ, அந்தோணி, மில்டன் ஜெபிஆகிய 7 மீனவர்களும் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேபாது, கடந்த 2005ம் ஆண்டுபிப்ரவரி 17ம் தேதி பாகிஸ்தான் கடற்படை வீரர்களால் கடத்திச் செல்லப்பட்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தமீனவர்களின் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 25,000நிதியுதவியை செய்யுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி இவர்கள் 7 பேருக்கும் தலா ரூ. 25,000 வீதம் மொத்தம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் நிதியுதவியைமாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications