300 ஏக்கரில் சென்னையில் மாரிடைம் பல்கலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சேது சமுத்திரத் திட்டப் பணிகள் திட்டமிட்டபடி 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்துவிடும் என மத்தியகப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக 168 பேரின் நிலங்கள், கட்டடங்கள் விரைவில்கையகப்படுத்தப்படும். அதில் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் கல்யாண மண்டபமும் ஒன்று.

இவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து ஒரு வாரத்தில் வட்டார வருவாய் அதிகாரி முடிவுசெய்வார். இதையடுத்து உரிய இழப்பீடு தரப்படும்.

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் திட்டமிட்டபடி 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்துவிடும். இந்தப்பணிகள் தாமதமாகும் என்று கூறப்படுவது தவறு. வேகமாக வேலை நடந்து வருகிறது.

ஆடிஸ் பாலம் பகுதியில் கடலை ஆழப்படுத்த தைவான் நாட்டின் இரு கப்பல்களும், இந்தியாவின் தனியார்கப்பல் ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளன.

சென்னையில் அமையவுள்ள கடல்சார் பல்கலைக்கழகத்துக்கு (மாரிடைம் யுனிவர்சிட்டி) மத்தியஅமைச்சரவையின் அனுமதி கிடைத்ததும் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு, உடனடியாக பணிகள்தொடங்கும்.

இதற்காக பக்கிங்காம் கால்வாயை ஒட்டி 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தைஎப்படி அமைப்பது என்பது குறித்து அறிந்து வர இரு குழுக்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுக்கு சென்றுதிரும்பி அறிக்கையும் தந்துவிட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+