இட ஒதுக்கீடு: கருணாநிதி-ஜெ பரஸ்பர புகார்
சென்னை:இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதவில்லை எனஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை மத்திய அரசும், தமிழக அரசும் கையாண்ட விதம்சரியில்லை என்று சட்ட வல்லுனர்கள் குறை கூறுகின்றனர். இந்த வழக்கு நடந்தகாலத்தில் ஐந்து நாட்களும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி,கோர்ட்டுக்கே போகவில்லை.
முக்கிய வழக்கு நடக்கும்போது அவர் எங்கு போனார், ஏன் போனார். தமிழகஅரசாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 31பி குறித்த விவாதங்கள் சரியானமுறையில் எடுத்து வைக்கப்படவில்லை.
"கிரீமி லேயர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வரும் பட்சத்தில்ஜாதிரீதியான இட ஒதுக்கீடு என்பது முடிந்துபோன விஷயமாகிவிடும் என்பதுகருணாநிதிக்கும், ராமதாசுக்கும் தெரியாதா?
ஜாதிரீதியான இட ஒதுக்கீடு என்பது இனி பட்டிமன்றங்களில் மட்டுமே பேசப்படஉள்ள விவாதப் பொருளாக மாற உள்ளது.
இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மக்களை ஏமாற்ற கருணாநிதியும் ராமதாசும் நாடகம்நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெ.வுக்கு தகுதி இல்லை: கருணாநிதி
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு பதிலளித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் 3 பேர் வாதாடி வருகின்றனர்.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி, முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம்ஜேட்மலானி, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்தார்ஜுனாஆகியோர் தமிழக அரசுக்காக ஆஜராகியுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் கூறுகையில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டம்சரியா, தவறா என்ற கேள்வியை எழுப்ப நாங்கள் தயாராக இல்லை. அதுகுறித்து இப்போது நாங்கள் விசாரிக்கவோ, ஆராயவோ போவதில்லைஎன்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டம் குறித்து கடந்த 1993ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்குவந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அரசு முறையான தகவல்களை, விளக்கங்களை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவில்லை.
எனவே இட ஒதுக்கீடு தொடர்பாக பேசவே ஜெயலலிாதவுக்கு தகுதி கிடையாது. உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கும், அவரது கட்சிக்கும் இடஒதுக்கீட்டில் அக்கறை இருந்திருக்குமானால் இந்த வழக்கில் அவர்களாகவே தங்களையும் இணைத்துக் கொண்டு வாதாடியிருக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications